திமுக எம்.பி ஆ. ராசா கடந்த 6-ம் தேதி பெரியார் திடலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது எம்.பி ராசா இந்து மதம் குறித்து பேசியது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, இந்துக்கள் குறித்து எம்.பி ராசா பேசக்கூடாத வார்த்தையை பேசியுள்ளார். அவர் சொல்லக்கூடாத கீழ்த்தரமான வார்த்தையை சொல்லிவிட்டார். அவர் கூறிய அந்த வார்த்தை நாட்டு மக்களுக்கு பொருந்துமா? திமுக தலைவர் குடும்பத்துக்கு பொருந்துமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.