Categories
உலக செய்திகள்

எய்ட்ஸக்கு 3.2 லட்சம் குழந்தைகள் பலி…. யுனிசெப் வெளியிட்டுள்ள…. அதிர்ச்சி தகவல்…!!

எய்ட்ஸ் நோய்க்கு பல லட்சம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச குழந்தைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஐநாவின் சர்வதேச குழந்தைகள் அமைப்பு புதிய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த வருடம் ஒவ்வொரு நூறு வினாடிக்கும் ஒரு குழந்தைக்கும் அல்லது 20 வயதுக்குட்பட்ட வாலிபர் ஒருவருக்கும் எச்ஐவி தொற்று ஏற்படுவதாக கூறியுள்ளது. மேலும் எச்.ஐ.வி தொற்றுக்கு கடந்த வருடம் மட்டும் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் அதிர்ச்சியான தகவல் ஒன்றினை ஐநாவின் சர்வதேச குழந்தைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இதுபற்றி யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குனர் கூறுகையில், “குழந்தைகள் சிலர் எச்.ஐ.வியினால் பலியாகி வருவகின்றனர். மேலும் தற்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றின் காரணமாக எச்ஐவி தொற்றுக்கு சிகிச்சை முறை தடைபட்டுள்ளது. இது கவலை அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |