அதிமுகவும் பாஜகவும் இணைந்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை நான் கையோடு எடுத்து வந்துள்ளேன் என்று கூறி செங்கலை காட்டி பிரச்சாரம் செய்தார் முகஸ்டாலின்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து கொண்டிருந்த போது பாஜகவும் அதிமுகவும் சேர்த்து கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை நான் கையில் எடுத்து வந்துள்ளேன் என்று கூறி செங்கல்லை காட்டிக் கேலி செய்தார்.