Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை நடத்தலாம்… உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எய்ம்ஸ்காக தற்காலிகமாக தேனி, சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரிகளில் எய்ம்ஸ் மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை தேனி மற்றும் சிவகங்கையில் தற்காலிகமாக மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்காலிகமாக இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக  நிர்வாகம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டால் மாணவர் சேர்க்கையை நடத்த ஏதுவாக இருக்கும் என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை அருகே தோப்பூரில் சுமார் 201 ஏக்கர் நிலத்தில் 1, 264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |