உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்த்து இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக இந்த தடைகள் விதிக்கப்பட்டது இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடம் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இருப்பினும் எரிசக்தி தேவைக்கு ரஷ்யாவின் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்திருக்கிறது. அதன்படி ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதற்காகவும் இயற்கை எரியாற்றல் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கின்ற எரிசக்தி நெருக்கடியை தொடர்ந்து இனி வரும் குளிர்காலத்தில் இங்கிலாந்திலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட கூடும் என அந்த நாட்டின் தேசிய மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது மின்சார பயன்பாட்டை குறைக்கும் விதமாக மூன்று மணிநேர மின்வெட்டு ஏற்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியின் எரிசக்தி ஒழுங்கற்ற முறை அமைப்பான பெடரல் நெட்வொர்க் ஏஜென்சி வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின்பற்றாக்குறை ஏற்படக்கூடும் இணை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் குளிர் காலத்தில் எரிவாயு நெருக்கடியை சமாளிக்கும் விதமாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம் எரிவாயு பயன்பாட்டை குறைக்க வேண்டும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல பிரான்ஸ் பின்லாந்து போன்ற நாடுகளிலும் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.