Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எரிந்து சாம்பலான ஸ்கூட்டர்…. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சள்பரப்பு கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காபி, மிளகு போன்றவற்றை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் தனது ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது ஸ்கூட்டர் எரிந்து சாம்பலாகி கிடப்பதை கண்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி ஸ்கூட்டரை தீ வைத்து எரித்துள்ளனர். இதுகுறித்து ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்கூட்டரை எரித்த மர்ம நபர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |