Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. நெல்லையில் பரபரப்பு…!!

தீ விபத்து ஏற்பட்டதால் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்ரமசிங்கபுரம் பகுதியில் ஆனந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழிலுக்காக ஆனந்த் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை வாங்கினார். இந்நிலையில் நேற்று மதியம் தண்ணீர் கேன்களை ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் சைக்கிளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் ஆனந்த் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோட்டார்சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தார். ஆனாலும் இந்த தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |