Categories
மாநில செய்திகள்

எரிந்த நிலையில் உடல் – ஐஐடி நிர்வாகம் விளக்கம்…!!!

சென்னை கிண்டியில் உள்ள சென்னை ஐஐடியில் நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரளாவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்ற எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவு திட்ட கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஹாக்கி மைதானத்தில்  உன்னி கிருஷ்ணன் உடை எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா என்ற கோணாத்தில் போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இதுகுறித்து ஐஐடி நிர்வாகம் இறந்த நபர் வெளியில் தங்கி இருந்து ஐஐடியில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார் என்றும், போலீஸ் விசாரணைக்கு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |