எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற தேவைகளை இறக்குமதி செய்வதற்கு நிதி அளிக்க முடியவில்லை. இதனால் இந்த வார தொடக்கத்தில் எரிபொருளை சேமிக்கும் முயற்சியில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இருப்பினும் பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் பல வாகன ஓட்டிகள் பல நாட்களாக காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக திங்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்றும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மின்சாரம் கிடைத்தால் ஆன்லைன் கற்பித்தலை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.