டாக்ஸி கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்தி உள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் தான் இந்த விலை உயர்வு அமல் படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு முதற்கட்டமாக டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. உண்மையில் இதற்கு முன்பே 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் கட்டணம் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைப்போலவே ஓலா டேக்ஸி நிறுவனமும் விரைவில் தனது போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மாதம் 22 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.