நியூசிலாந்திலுள்ள வெள்ளைத் தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதறிய விபத்தில் ஐந்து நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .
எரிமலைகள் நிரம்பிய வெள்ளைத் தீவை சுற்றிப்பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகளை படகுகளில் அழைத்துச் செல்லப்பட்டனர் . இந்த நிலையில் , அங்கு திடீரென்று எரிமலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது அதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் .தற்போது அங்கு புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் அசாதாரண நிலை நிலவுகிறது ,அதனால் மீட்பு பணியில் சிறிது கடினம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .