Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எருதுவிடும் விழா…. ஒன்றன்பின் ஒன்றாக பாய்ந்த 354 காளைகள்…!!

வேலூர் மாவட்டத்தில் நடந்த எருது விடும் விழாவில் 354 காளைகள் கலந்து கொண்டன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அருகில் பென்னாத்தூர் கிராமத்தில் எருது விடும் விழா நடந்தது. வேலூர் தாசில்தார் செந்தில் தலைமை தாங்கிய இந்த விழாவிற்கு பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாகரன், சுபாஷினி லோகநாதன், முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த விழாவிற்கு வந்தவர்களை வருவாய் ஆய்வாளர் உலகநாதன் வரவேற்றுள்ளார். மேலும் கவுன்சிலர் அண்ணாதுரை, ஜீவ சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிகாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள்  உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதன்பின் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த விழாவில் 354  காளை  மாடுகள் கலந்து கொண்டது. மேலும் இவ்விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விழா ஏற்பாட்டை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், விழாக் குழுவினர்கள் முன்னின்று செய்தார்கள்.

Categories

Tech |