மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்ற எருமை மாடு சாணம் போட்டதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக பொது இடங்களில் சுகாதாரம் மிகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எச்சில் துப்பினால், குப்பைகளை கொட்டினால் அபராதம் என்று அனைத்திற்கும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் உள்ளனர்.
இந்நிலையில் அங்கு எருமை மாடு சாணம் போட்டதால் மாநகராட்சி விதிமுறைகளை மீறியதாகக் கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதன் உரிமையாளரிடம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொது மக்களுக்கு மட்டும் விதிமுறைகள் இல்லாமல் விலங்குகளுக்கும் விதிமுறைகள் விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.