சிவகங்கை மாவட்டம் பையூர் பழமலை நகரில் காட்டுராஜா என்ற சமூகத்தை சேர்ந்த 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விரதமிருந்து செப்.8ல் காப்பு கட்டினர். மது எடுப்புடன் நிறைவடையும் இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக எருமை மாடுகளை பலியிட்டு ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை தொடங்கியது.
காளி தெய்வத்திற்கான பிரதான இடத்தில் இருக்கும் முதல் எருமை மாடு சம்மதம் தெரிவிக்கும் வரை (தலையை அசைப்பது) காத்திருந்து அதை பலியிட்ட பின் அடுத்தடுத்த மாடுகள் வெட்டப்பட்டன. கழுத்தில் வெட்டி அதிலிருந்து பீச்சியடிக்கும் ரத்தம் அப்படியே குடிக்கப்பட்டது. காளிக்கு எருமை, பிற தெய்வங்களை வணங்குபவர்கள் ஆடுகளையும் பலியிட்டனர். இவ்வாறு நேற்று 16 எருமை மாடுகளும், 100க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்களும் வெட்டப்பட்டன. இவ்விழா சுமார் 25 தலைமுறைக்கும் மேலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.