செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், கருப்பாக இருந்தால் திராவிடர்கள் என்றால் அப்போது கருப்பாக இருக்கும் எருமை மாடு திராவிடரா? ஆப்பிரிக்கர்கள் அனைவரும் திராவிடர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிரதமர் மோடி அம்பேத்கருடன் சாப்பிட்டது இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து என்று கூறியவர் அதற்கு எல்லாம் அவரை விமர்சிப்பதை அவசியமற்றது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு கருத்து தெரிவிக்கும் விதமாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திராவிடத்தை எருமை மாட்டுடன் ஒப்பிடுவது திராவிடத்தை கொச்சைப்படுத்தும் செயல். அரசியல் ரீதியாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்று கூறிய அவரை சீமான் இப்படி பேசியது பகுத்தறிவு உள்ளவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.