Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம்”… வெளியிடப்பட்ட நோட்டீஸால் பெரும் பரபரப்பு…!!!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை கூட போராடித்தான் வாங்க வேண்டியதாக இருக்கின்றது. இதனால் பொதுமக்களின் போராட்டங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அந்த வகையில் குளித்தலையில் எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கைவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதிகளில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி அருகே முட்புதர்களில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் இருப்பதினால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றதாம்.

இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தும் குளித்தலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மீது தமிழக அரசு மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல இந்த பள்ளிக்கு அருகில் உள்ள நிலத்தில் வளர்ந்துள்ள  முச்செடிகளை அப்புறப்படுத்தி அந்த அரசு நிலத்தை பள்ளிக்கு ஒப்படைக்க வலியுறுத்தி பெற்றோர் கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பள்ளி மாணவ மாணவிகளுடன் சேர்ந்து அடுத்த மாதம் செப்டம்பர் 7ஆம் தேதி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எருமை மாட்டிடம் மன அளிக்கும் போராட்டம் நடத்தப் போவதாக போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கின்ற நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |