மத்திய பிரதேசத்தில் எருமை ஒன்று சாலையில் சாணி போட்டதால் தூய்மை கருதி எருமை மாட்டின் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மத்தியபிரதேசம் தூய்மை பணிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குவாலியர் மாநகராட்சியின் தூய்மையான பரப்புரை செய்வதுடன், சாலையில் குப்பை கொட்டுவது மாசுபாடு ஏற்படுத்துவதற்கு அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் கால்நடைகளை சாலையில் திரியும் உரிமையாளர்களையும் அரசு கண்டித்து வருகிறது.
எருமை மாடு ஒன்று சாலையில் சுற்றித்திரிந்த சாணி போட்டது. இதற்கு உரிமையாளர் பெடல்ஸ் என்பவருக்கு அந்த மாநகராட்சி 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அதனை செலுத்தி எருமை மாட்டை பிடித்துச் சென்றார். மக்கள் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், பொறுப்பாக நடந்து கொள்ளவும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.