Categories
பல்சுவை

எறும்புகள் எப்போதும் வரிசையாக செல்ல என்ன காரணம் ?

பொதுவாக சுறுசுறுப்பா வேலை செய்பவர்களை  எறும்பு மாதிரி வேலை செய்கிறீர்கள் என்று சொல்வோம்.

இந்த எறும்புகள் எல்லாம் ஒன்று பின்னாடி லைன் கட்டிக் கொண்டே செல்கிறது என்றும் சொல்வோம்.

பொதுவாக ஆட்டு மந்தைகள் லைன் கட்டிக் கொண்டு போனால் முன்னாடி இருக்கிறது என்னவென்று தெரியாமல் ஒரு ஆடு முன்னாடி விழுந்தால் பின்னாடி வரும் ஆடுகள் எல்லாம் அது பின்னாடியே விழுந்து விடும்னு சொல்லுவாங்க.

ஆனால் இந்த எறும்புகள் மட்டும் சரியான பாதைக்கு போகிறது. அதே சமயம் அதற்கு பின்னாடி ஆயிரம் எறும்புகளாக இருந்தாலும் லைன் ஆகவே வருகிறது.

இதற்கு காரணம் என்ன ? அப்படி என்றைக்காவது நாம் யோசித்து இருப்போமா ? இன்றைக்கு அதற்கான பதில் தெரிய போகிறது.

உயிரினங்களில் ரொம்ப சின்ன உயிரினமா மதிக்கப்படுவது எறும்புகள். இந்த எறும்புகள் இராணுவ வீரர்கள் மாதிரி அணிவகுத்து போவதற்கான காரணம் எறும்புக்கு பார்வை திறன் கொஞ்சமாக இருக்குமா ?

அதனால், எறும்புகளின் உடலில் சுறக்கின்ற அமிலங்கள் உடைய வாசனையை நுகர்ந்து படி ஒன்றன்பின் ஒன்றாக  எறும்புகள் பின் தொடர்ந்து செல்கிறதாம்.  இதுதான் எறும்பு ஒன்று பின்னாடி ஒன்று போவதற்கான காரணம்.

Categories

Tech |