எறும்புகள் எதற்காக வரிசைகட்டி செல்கின்றன என்பது பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நாம் அனைவரும் உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களை பார்த்திருப்போம். அதில் குறிப்பாக எறும்புகள் வரிசையாக செல்வதை கண்டிப்பாக அனைவரும் பார்த்திருக்க முடியும். ஆனால் அவை எதற்காக வரிசையாக செல்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. அதனைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். உலகில் 11,000 வகை எறும்புகள் உள்ளன. எறும்புகளுக்கு மோப்ப சக்தி அதிகம்.
உணவு இருப்பதை பார்க்கும் முதல் எறும்பு, தன் தலையில் உள்ள ஆன்டெனா போன்ற உறுப்புகளால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன்பிறகு அங்கிருந்து திரும்பும் போது உடலின் பின்பகுதியில் இருந்து பிரமொன் என்ற வேதிப்பொருளை தரையில் இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக் கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றி சென்று உணவை அடைகின்றன. அதனால்தான் எறும்புகள் அனைத்தும் வரிசைகட்டி செல்கின்றன.