மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகனூர்பட்டி பகுதியில் அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாயிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெண்ணீர் வைப்பதற்காக ஜாயிதா எலக்ட்ரிக் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதால் ஜாயிதா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த ஜாயிதாவை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜாயிதா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.