உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கை 27 வயதான ஆஸ்திரேலிய இளம் நடிகை நடாஷா காதலிப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான 50 வயதாகும் எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆகும். இவரை ஆஸ்திரேலியாவின் இளம் நடிகையான 27 வயதாகின்ற நடாஷா காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த காதல் குறித்து நடாஷா கூறியதாவது, தான் 233 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துடைய எலான் மஸ்க்கை காதலிப்பது பணத்திற்காக அல்ல என்றும், மாறாக அவரது மூளைக்காகத்தான் மஸ்க்கை நான் விரும்புகிறேன் என்றும் நடாஷா தெரிவித்துள்ளார். இதற்கிடையே எலானிற்கு தனது முதல் மனைவியான ஜஸ்டினுடன் 5 குழந்தைகள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.