எலான் மஸ்க் ட்விட்டர் கம்பெனியை எதற்காக வாங்கினார் என்பது குறித்த சில தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் கம்பெனியை வாங்கியுள்ளார். இவர் 44 பில்லியன் அமெரிக்க டாலரை கொடுத்து ட்விட்டர் கம்பெனியை வாங்கியுள்ளார். இவர் இந்த கம்பெனியை எதற்காக வாங்கியுள்ளார் என்பது குறித்த 2 காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ட்விட்டரில் ஒரு சிலருக்கு மட்டுமே கருத்து சுதந்திரம் இருப்பதாகவும், இந்த சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க் ட்விட்டர் கம்பெனியை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 1.50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். ஆனால் ட்விட்டரில் ஒரு கார் விளம்பரம் செய்தால் அதற்கு 20 ரூபாய் செலவு செய்தால் போதும். அதன்பிறகு எலான் மஸ்க்கை ட்விட்டரில் 8 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். ஒருவேளை எலான் மஸ்க்கின் ட்விட்டர் ஆக்கவுண்டை முடக்கி விட்டால், ஒரு காரை விற்பனை செய்வதற்கு 1.50 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதன் காரணமாகத்தான் எலான் மஸ்க் ட்விட்டர் கம்பெனியை வாங்கியுள்ளதாக மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளது.