Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க் மீது வழக்கு தொடுத்த டுவிட்டர் நிறுவனம்…. என்ன காரணம் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான்மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவெடுத்தார். இதனையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகமானது சென்ற ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. அதன்பின் இந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடந்து வந்தது. இதனிடையில் டுவிட்டரிலுள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத சூழ்நிலையில் உள்ள கணக்குகள் உட்பட சில விபரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை வைத்தார். ஆனால் 2 மாதங்கள் ஆகியும் எலான்மஸ்க் கேட்ட விபரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்துவந்தது.

அதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் சென்ற 9ம் தேதி அறிவித்தார். ஏனெனில் போலி கணக்குகள் குறித்து கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தராதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான்மஸ்க் அறிவித்தார். ஆகவே 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான்மஸ்க் கைவிட்ட சம்பவம் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சூழ்நிலையில் அவர் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான்மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டும் என்று டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

Categories

Tech |