கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் எலிகளுடன் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே முழுவதும் நம்பி உள்ளனர். தற்போது மணிலா பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால் மணிலா பயிர்கள் போடப்பட்டிருந்த வயல்கள் முழுவதுமாக எலிகளின் தொல்லை காணப்படுகின்றன. இதனால் மகசூலில் பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடும். இந்த நிலையில் பல்வேறு சங்கங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கையில் எலிகளை வைத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகளின் நலனுக்காக சோலார் வேலி அமைத்து தர ஊதிய மானியம் அளிக்கப்பட வேண்டும்.
கடந்த இரண்டு வருடங்களாக மழை வராததால் மணிலா பயிர் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மணிலா பயிர் அறுவடைகளை சோதனை செய்து மகசூல்களை முழுவதும் கணக்கிட்டு இன்ஷ்யூரன்ஸ் செய்துதர வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வயல்கள் முழுவதும் சேதம் செய்யும் எலிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கருத்தடை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சரவணன், கோவிந்தசாமி, புருஷோத்தமன், சிவா, மனோகர், சிவராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.