Categories
உலக செய்திகள்

எலிசபெத்தின் இறுதி சடங்கு… சீன துணை அதிபர் பங்கேற்பு… வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு…!!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீன எம்பிக்கள் குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சீனாவின் துணை அதிபர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் லண்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வருகின்ற 19ஆம் தேதி இறுதி சடங்கு மற்றும் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்த சூழலில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவை சேர்ந்த ஐந்து எம்பிக்கள் உட்பட ஏழு பேர் கொண்ட குழு அனுமதி கோரி உள்ளது. அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

மேலும் இது பற்றி சீன அரசின் செய்தி தொடர்பாளர் பேசும்போது சீன குழுவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அரசு ராஜிய ரீதியிலான நடைமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் இங்கிலாந்து அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சீன அதிபர் ஜின்பிங் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் மற்றும் வடகொரிய, பெலாரஸ், மியான்மர், ஈரான் போன்ற நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இந்த சூழலில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சீன துணை அதிபர் வாங் கிஷான் அதிபர் ஜி ஜின்பிங் சிறப்பு பிரதிநிதியாக கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |