Categories
மாநில செய்திகள்

“எலி கடித்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு”….. உயர் நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு….!!!!

மதுரையில் எலி கடித்த பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப்பெற வந்த பெண் எலி கடித்த நிலையில் தனக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த மனு 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மதுரையில் நிகழ்ந்த சாலை விபத்தில் என் மகன் சுரேஷ் காயம் அடைந்தார். அதற்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது மகனுக்குத் துணையாக நான் அங்கு இருந்தேன். மகன் படுக்கை அருகே தூங்கிக் கொண்டிருந்த பொழுது என்னை ஏலி ஒன்று கடித்தது. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முறையாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதில்லை.

இதனால் எலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட எனக்கு இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் ஜனவரி 23 எலி கடித்ததாக மனுதாரர் கூறுகிறார். அப்போது அவர் மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை. ஜனவரி 31ஆம் தேதி தான் தெரிவித்து இதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். உடலில் எலி கடித்ததற்கான காயம் இல்லை. மருத்துவமனை சுகாதாரத்தை பாதுகாப்பது தொடர்பாக ஆலோசனை குழு ஆய்வு நடத்தி வருகின்றது.

எதிர்பாராமல் நிகழும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதனால் எலி கடிக்கு ஆளான பெண் இழப்பீடு பெற தகுதியானவர். இதனால் அவருக்கு சுகாதார முதன்மைச் செயலாளர் ரூபாய் 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |