எலுமிச்சையை கொண்டு மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும்…
எலுமிச்சை பழத்தில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.ஒரு சிறிய பழம் நம் இத்தனை பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுவது கண்டால் ஆச்சரியமாக இருக்கிறது.இந்த எலுமிச்சையை கொண்டு மிகப்பெரிய பிரச்சினையைக் கூட எளிதில் தீர்க்கமுடியும்.
- தினமும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து தேன் சேர்த்து குடித்து வந்தால் குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்,மேலும் கல்லீரல் பலப்படும்.
- குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும்.அதுமட்டுமின்றி எலுமிச்சை சாறு தொடர்ந்து பருகி வருவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
- எலுமிச்சை சாற்றில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.இது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.
- இதில் பொட்டாசியம் உள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.மேலும் இதில் விட்டமின் சி நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் உடலில் தேவையில்லாத கொழுப்பு கரைக்கப்படும். தினமும் உடற்பயிற்சிக்கு பின் ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.
- சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது குமட்டல் வருவது போல் தோன்றும்.அவர்கள் எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால் குமட்டலைப் தவிர்க்கலாம்.
- எலுமிச்சை சாற்றை தினமும் பருகி வரும்பொழுது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும்.வாத நோய் உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ் குடிப்பது நல்லது.
- முகப்பரு உள்ளவர்கள் தினமும் எலுமிச்சை சாற்றை உள்ளுக்குள் சாப்பிட்டும் இரவு படுக்கும் போது பழச்சாற்றை மேலுக்குப் பூசி வந்தால் முகப்பரு போன இடமே தெரியாது.
- பேதி நிற்காவிட்டால் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிடும் பொழுது உடனே நின்று விடும்.குளவி மற்றும் தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சைப் பழத் துண்டை வைத்து தேய்த்தால் அதன் விஷம் உடனே இறங்கி விடும்.
- பெண்களுக்கு ஏற்படும் வெற்றி சூடு தணிய அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு எலுமிச்சை பழச்சாறும் சிறிய அளவு நீராகாரம் தண்ணீரில் கலந்து மூன்று தினங்கள் சாப்பிட்டால் நோய் நீங்கும்.மேலும் மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கும்.
- உடம்பில் எங்காவது அடிபட்டாலோ வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும்.இந்த ரத்தக்கட்டு நீங்க சுத்தமான இரும்பு கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து அதில் சிறிதளவு கற்பூரத்தை போட்டு காய்ச்ச வேண்டும்.அது குழம்பு போல வரும் அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதியில் பற்று போட வேண்டும்.இவ்வாறு காலை மாலை இரு வேளை போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.
- தலைவலி தொடர்ச்சியாக உள்ளவங்க ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி அரை மூடியை பிழிந்து சாறு எடுத்து கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும் காலை மாலை என இருவேளையும் அருந்த வேண்டும் தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி வரவே வராது.