Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எலுமிச்சை பழம் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு… ஒரு கிலோ ரூ 200-க்கு விற்பனை ..!!!

எலுமிச்சைபழம் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ ரூ 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், வத்திப்பட்டி, நத்தம், லிங்கவாடி, பெரியமலையூர், குட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் எலுமிச்சை பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்கள் சந்தைக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகமாக இருந்ததால் பத்து ரூபாய்க்கு 5 முதல் 7 பழங்கள் வரை விற்றனர். இந்த மே மாதம் ஆரம்பத்திலிருந்து எலுமிச்சை பழம் வரத்து குறைந்து விட்டது. இதனால் தற்சமயம் சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பழம் ரூபாய் 10 முதல் 15 வரை விலை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது கூறியதாவது, பொதுவாக கோடை காலம் வந்தாலே எலுமிச்சை பழம் விலை இரண்டு மடங்காக விற்கப்படுகிறது. இந்த சீசன் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இருக்கும். ஆனால் இந்த மாதமே எலுமிச்சை பழத்தின் வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை அதிகமாக காணப்படுகிறது. இனி வருகின்ற காலங்களில் வரத்து அதிகமாக இருந்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

Categories

Tech |