கோடைக் காலம் தொடங்கியுள்ள காரணத்தினால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் எழுமிச்சை பழம் ஜூஸ் விரும்பி பருகுகிறார்கள். கோவில், திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதாலும், எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் ஒரு கிலோ எழுமிச்சை ரூபாய் 400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குஜராத், கர்நாடகாவிலும் பழத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்திலும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தற்போது எலுமிச்சை கிலோ ரூபாய் 100 யாகவும், பழம் ஓன்று ரூபாய் 10 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.