விவசாயியை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் புதூர் தெற்கு தெருவில் பணியாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு வெளியில் நிற்கும் எலுமிச்சை மரத்தை பணியாளர்கள் வெட்டியுள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான முத்துசாமி என்பவர் கூறியதை கேட்டு தான் பணியாளர்கள் மரத்தை வெட்டியதாக ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கோபமடைந்த ராஜேந்திரன் முத்துசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.