கோடை வெயில் காரணமாக எலுமிச்சையின் விலை பல மடங்கு கடுமையாக உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரம் சந்தையில் எலுமிச்சைபழம் கிலோ 200 ரூபாயை கடந்து விற்பனையாகி வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூபாய் 40 விற்கப்பட்ட ஒரு கிலோ எலுமிச்சை தற்போது பல சந்தைகளில் ரூபாய்க்கு 350 க்கு விற்பனையாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளன.
மேலும் சொக்கம்பட்டி, திரிகூடபுரம், சங்கரபெரி, அரியநாயகிபுரம், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் எலுமிச்சை சாகுபடி நடைபெறுவதால் லெமன் சிட்டி என்று அழைக்கப்படுகின்றது. இவ்வளவு உற்பத்தி நடந்தும் ஒரு கிலோவின் விலை 200 ரூபாயை கடந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது ஒரு எலுமிச்சையின் விலை 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வட மாநிலங்களில் அதிக டிமாண்ட் இருப்பதால் கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. மேலும் லெமன் ரைஸ் விலையும் உயர்ந்துள்ளது.