எலும்புக்கு வலுசேர்க்கும் பருப்பு வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம்.
சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
உளுந்தம்பருப்பு:
உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் பி, இரும்பு, போலிக் அமிலம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றது. இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டுமே உளுந்தம் பருப்பில் உள்ளது. இதனால் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் அல்லது வீக்கம் போன்றவற்றால் பாதிக்கப் படுபவர்கள் உளுந்தம்பருப்பு உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் இந்தப் பிரச்சினைகள் சரியாகும்.
உளுந்தம்பருப்பு அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் உடலில் ஆற்றல் மட்டத்தை அதிகரிப்பதுடன் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
பெண்களின் எலும்புகள் 30 க்கு பிறகு கால்சியத்தை இழக்க தொடங்கும் அதை விரைவில் பலவீனமடைகிறது. இதனை சரி செய்ய நீங்கள் உளுந்தம் பருப்பை உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள தாதுக்கள் எலும்பை அடர்த்தியாக மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
உளுந்தம் பருப்பை தவறாமல் உட்கொள்வது எலும்புகள் தொடர்பான பிரச்சினையை சரிசெய்ய மிகவும் உகந்தது. நரம்பியல் குறைபாடு, பக்கவாதம் முக பக்கவாதம் மற்றும் பிற கோளாறுகள் உள்ளவர்கள் உளுந்தம் பருப்பை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.