உடலில் ஆரோக்கியம் என்று சொல்லும் பொழுது அதில் எலும்புகளின் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. எலும்புகள் தான் நம் உடலுக்கு சரியான வடிவத்தை கொடுக்கிறது. ஒருவரின் வலிமை என்பது அவரின் எலும்பின் வலிமை பொறுத்துதான் அமையும்.
இன்றைய கால நவீன உணவு பழக்கவழக்கம் முறையினாலும், உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யக்கூடிய சூழ்நிலையும் எலும்புகள் பலவீனமடைந்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. உடலுக்கு உறுதியையும், நல்ல வலிமையும் கொடுக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டால் அதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
எலும்புகளை இரும்புபோல் வலிமையாக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை பார்க்கலாம்..
நாம் சாப்பிடும் உணவுகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் “டி” அதிகம் உள்ள உணவுகளை தினந்தோறும் சாப்பிட்டு வருவதன் மூலம் மிக எளிதில் நம் எலும்புகள் வலிமையாக முடியும். .
மீன்:
மீன் எவ்வளவு அளவு அதிகமாக சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு எலும்புகள் வலிமையாக இருக்கும் என்று ஊட்டச்சத்து வல்லுனர்கள் கூறுகிறார்கள். மற்ற பொருட்களைக் காட்டிலும் மீனில் அதிக அளவில் விட்டமின் “டி” இருக்கும். வாரத்திற்கு 2 முதல் 3 முறை மீன் சாப்பிட்டு வர எலும்புகள் வலிமையாகும். அதிலும் கால்சியம் அதிகமுள்ள மீன்களை எடுத்து விட்டு வருவது ரொம்ப நல்லது. விட்டமின் டி எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் இருக்கக்கூடிய கால்சியத்தை உடல் கிரகித்துக் கொள்ள இது மிகவும் உதவியாக உள்ளது. இந்த சத்தை முற்றிலும் இலவசமாகவும் தரமுடியும். அதிகாலை சூரிய உதயத்தின் போது 15 நிமிடங்கள் சூரிய ஒளி நம் உடலின் மீது படும்படி நிற்பதன் மூலம் இந்த சத்தை நாம் முற்றிலும் இலவசமாக பெற முடியும். இது எலும்பின் மீது எலும்பின் வலிமைக்கு மிகவும் நல்லது.
தயிர்:
ஒரு நாளைக்கு நம் உடம்பிற்கு தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் ஒரு கப் தயிரில் அடங்கியுள்ளது. தினமும் ஒரு கப் தயிர் எடுத்து சாப்பிடுவதால் நம்முடைய எலும்புகள் வலிமையாக முடியும். அதேபோல் பாலில் அதிக அளவு கால்சியம் நிறைந்து இருக்கிறது. தினமும் ஒரு கிளாஸ் பால் குடித்து விட்டு வருவதை வழக்கமாக வைத்துக் கொள்வதன் மூலம் நம் எலும்புகளை மிக எளிமையாக வலிமையாக்க முடியும். அதே போல் பால் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் அதிக அளவு கால்சியம் அடங்கியுள்ளது.
சீஸ்:
சீஸில் அதிகளவு கால்சியம் மற்றும் விட்டமின் டி அடங்கி இருக்கிறது. இந்த சீஸ் நாம் அன்றாட உணவுகளில் சிறிதளவு எடுத்துக் கொண்டு வருவது மிகவும் நல்லது.
கீரைவகைகள்:
ஒரு கப் கீரையில் 25% ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் சத்தை அடங்கியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இரும்புச்சத்து வைட்டமின் “ஏ” நார்ச்சத்து என இன்னும் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இதில் நிறைந்திருக்கிறது. தினமும் ஒரு கப் கீரை சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்புகள் வலிமையாகும்.
நாட்டுக்கோழி முட்டை:
நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் முட்டையில் அடங்கியிருக்கிறது. தினசரி தேவையான 6% வைட்டமின் சத்துக்கள் உள்ளது. மிக எளிமையாக கிடைக்கக்கூடிய முட்டைகள் நாம் வலிமை பெறவேண்டும் என்று சொன்னால் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
சோயா உணவுகள்:
அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் எலும்புகள் வலிமையாகும். சோயா உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள் வலிமையான எலும்புகளை பெற்றிருப்பதாக நிரூபித்திருக்கிறார்கள். ஆரோக்கியமான ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதில் இருக்கக்கூடிய பைட்டோ ஈஸ்ட்ரோஜன் அளவை மட்டும் ஐசோடோப்புகள் நமது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது.
ஆலிவ் ஆயில்:
பழங்களையோ அல்லது ஆலிவ் ஆயிலை நமது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதில் இருக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நம் எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தம், வீக்கத்தையும், தேய்மானத்தையும் குறைக்கும். அதுமட்டுமல்லாமல் எலும்பு செல்களை புதுப்பிப்பதற்கு ஆலிவ் ஆயில் பயன்படுகிறது. முடிந்தவரை ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி வருவது மிகவும் நல்லது.
நமது எலும்புகளை இரும்புபோல் வலிமையாக இந்த உணவுகளை சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் தினசரி உடற்பயிற்சியும் மிகவும் அவசியம். தினசரி ஓடுவது, வேகமாக நடப்பது, குதிப்பது, ஸ்கிப்பிங் செய்வது, இதுபோன்ற எளிமையான உடற்பயிற்சிகள் முதல் கனமான உடற்பயிற்சிகள் செய்வதும் மிகவும் அவசியமான ஒன்று.
அப்படி உடற்பயிற்சி செய்யும்போதுதான் நமது எலும்புகள் நம் உடலில் இருக்கக்கூடிய சத்துக்களை வேகமாக கிரகித்துக்கொள்ளும். அதேபோல் எலும்புகள் வலிமையாக வேண்டும் என்று சொன்னால் சில தவிர்க்க வேண்டிய பொருட்களும் இருக்கிறது. சிலர் பார்த்தீர்கள் என்றால் பல முறை டீ , காபி குடிப்பார்கள் இது எலும்புகளின் வலிமைக்கு நல்லதல்ல, ஏன் என்றால் காபியில் இருக்கக்கூடிய அப்படிங்கிற பொருள் எலும்புகள் கால்சியம் உறிஞ்சுவதை தடுக்கும் முடிந்த வரை காபி, டீ அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது