சேலம் மாவட்டத்தில் வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலையில் எலும்புக் கூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கருப்பூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான வெள்ளை கற்கள் வெட்டி எடுக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. செங்கரடு, தேக்கம்பட்டி போன்ற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சேலம் செல்வதற்கு குறுக்கு வழியாக அந்த தொழிற்சாலை பகுதியை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் முட்கள் நிறைந்த அந்த பகுதியில் எலும்பு கூடு ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிற்சாலை ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை சநடத்தியுள்ளனர். அப்போது அந்த எலும்புக்கூடு அருகில் சேலை, மது பாட்டில் கிடந்துள்ளதால், அது பெண்ணின் எலும்புக்கூடு என்று விசாரணையின் போது தெரியவதுள்ளது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் அங்கிருந்து எலும்புக் கூட்டை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.