அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன், மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர், மாநகராட்சி மேயர் இந்திராணி, மருத்துவமனை டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர்கள் மருத்துவமனையில் அமைந்துள்ள எலும்பு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு வங்கி உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் 95.55 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 88.5 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர்.
ஆனால் மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி இருக்கிறது . எனவே அனைவரும் கட்டாயமாக தடுப்புசி செலுத்த வேண்டும். இந்நிலையில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு டெல்லி, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இதுவரை தமிழகத்தில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு இல்லை . இதனையடுத்து இந்த மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 40 லட்ச ரூபாய் மதிப்பில் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது. இதுவரை 36 எலும்புகள் நோயாளிகளிடமிருந்து கொடையாக பெறப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயாளிகள் 2 பேரிடம் இருந்து எலும்புகள் மற்றும் ஜவ்வுகள் எடுத்து சேமிக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புகள் மற்றும் ஜவ்வுகள் ஒரு காவலாளி, 2 விளையாட்டு வீரர் என மொத்தம் 7 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு எலும்பு மாற்று அறுவகை சிகிச்சை செய்து நமது மதுரை அரசு மருத்துவமனை மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 3 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஆனால் இங்கு இலவசமாக எலும்புமாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.