Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எலும்பு மூட்டுக்கு வலு சேர்க்க… இதை சாப்பிட்டு வாங்க…!!!

பிரண்டை, எலும்பு மூட்டுகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. அதுவும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரண்டையை சாப்பிடுவதால், எலும்பின் அடர்வு அதிகரித்து, பல இன்னல்களிலிருந்து மீளலாம். இது ஒரு சிறந்த மலமிளக்கி ஆகும்.

தேவையானவை:

பிரண்டை                   – 250 கிராம் (நறுக்கி வெயிலில் காயவைத்தது)
புளி                                 – ஒரு நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள்  – ஒரு டீஸ்பூன்
உப்பு                              – தேவைக்கேற்ப
துவரம்பருப்பு           – 100 கிராம்
உளுத்தம்பருப்பு     – 100 கிராம்
மிளகு                           – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை        – 2 கைப்பிடி அளவு
சுக்கு                             – ஒரு துண்டு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் துவரம்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பின் அதே கடாயில் மிளகு, சுக்கு, புளி ஆகியவற்றை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.

பின்னர் கறிவேப்பிலையையும், காய்ந்த பிரண்டையையும் வறுத்துக் கொள்ளவும். அடுத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் அரைத்து ஈரமில்லாத பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.

பின் அரைத்த பிரண்டை பொடியை சுடுசாதத்தில், நெய் (அ) நல்லெண்ணெய்யுடன் சேர்த்து வாரம் ஒருமுறை சாப்பிடலாம், அல்லது தோசை மீது தூவியும், இட்லிக்குத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். சுவை அதிகமாக இருக்கும்.

Categories

Tech |