Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலும்பை வலுவாக்க… “கால்சியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

எலும்பை வலுவாக்கும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

கால்சியம், வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு பலவீனமாகும். ஆரோக்கியமான எலும்புக்கு நாம் உணவில் கால்சியம், வைட்டமின் டி அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உணவு களை குறித்து இதில் பார்ப்போம். இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம். நண்டில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் இது எலும்பை வலுவாக்கும்.இதை  சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் வைட்டமின் சத்து கிடைக்கின்றது.

பால் பொருட்களில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. முக்கியமாக சீஸ் சிறிதளவு வைட்டமின் சத்தும் இதில் நிறைந்துள்ளது.  சீஸ் பயன்பாட்டை சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உடல் எடை அதிகரிக்கும். உடலுக்கு தேவையான சத்துக்களை முட்டை வழங்குகிறது. உடலுக்கு தினசரி தேவையான 6 சதவீத சத்துக்கள் முட்டையில் உள்ளது. எனவே தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்வது உடலில் உள்ள எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

வைட்டமின்-ஏ, இரும்புச் சத்து, நார்ச் சத்து ஆகியவை நிறைந்த கீரையை நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் .மழைக்காலங்களில் கீரை உணவை குறைத்துக் கொண்டு மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். கீரைகளில் வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, முள்ளங்கிகீரை, பாலக் கீரை, வெந்தயத்தால் ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் வலுவடையும்.

Categories

Tech |