Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எலெக்ட்ரிக் கடை உரிமையாளரை கடத்த முயன்ற 5 பேர்… மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்..!!

எலெக்ட்ரிக் கடை உரிமையாளரை காரில் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி பயணிகள் மாளிகை முன் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 35 வயதுடைய கோபிலால், 27 வயதுடைய பிரவீன் ஆகியோர் சேர்ந்து எலெக்ட்ரிக் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த கோபிலாலை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென்று அவரை தாக்கி காரில் கடத்த முயன்றுள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

இதையடுத்து எடப்பாடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் தாக்குதலில் படுகாயமடைந்த கோபிலாலை சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியபோது அதில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 29 வயது உடைய அர்ஜுன் ராம், 22 வயதுடைய யஸ்வந்த், 26 வயதுடைய மகேந்திர குமார், 27 வயதுடைய அமர்சிங், 35 வயதுடைய தனராம் என்பது தெரியவந்தது. இவர்களிடம் பர்வீனின் அத்தை மகன் பரத் என்பவர் சொந்தகாரர் என்ற முறையில் அடிக்கடி கடைக்கு வந்துள்ளார். மேலும் பிரவீன் அத்தை மகனான பரத் என்பவர் அந்த ஐந்து பேரிடம் ரூ 6 லட்சம் வாங்கி உள்ளார். இதனால் பரத்தை தேடிக்கொண்டு எடப்பாடி வந்த அந்த 5 பேரும் கோபிலாலை கடத்த முயன்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அந்த 5 பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |