அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், காக்கநாடு நீலம்பாடிஞ்சியத்தில் உள்ள அஜந்தா அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அப்போது b3 என்ற குடியிருப்பில் அபர்ணா ரெஜி என்ற பெண்ணும், அவரின் உறவினரான ஆலன் ராஜுவும் சமையலறையில் தொட்டி வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளனர்.
சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள கஞ்சா செடியை காவல் துறையினர் அங்கிருந்து கைப்பற்றின. விசாரணையில் இருவரும் இன்ஜினியர் எனவும் 8 மாதங்களாக அந்த குடியிருப்பில் தங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதன் பிறகு இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கஞ்சா செடிக்காகவே அவர்கள் தங்களது சமையலையில் பிரத்தியேகமாக led விளக்குகளையும், எக்ஸாஸ்ட் ஃபேனும் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.