எல்ஐசியின் குறிப்பிட்ட பாலிசியில் நாம் முதலீடு செய்யும் பொழுது 17 லட்சம் முதிர்வு தொகையாக பெறலாம்.
எல் ஐ சி யின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை அரசு அறிமுகம் செய்து வருகிறது. இந்தத் திட்டங்களின் மூலம் மக்களின் தேவைகள் மற்றும் அவசர கால தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் லாப் பாலிசி திட்டத்தில் மாதம்தோறும் 7000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 17 லட்சம் முதிர்வு தொகையாக கிடைக்கும். இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும்போது வருமான வரி சட்டம் 80 சி என் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் எட்டு வயது முதல் 59 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்யலாம். இந்த பாலிசியின் முதிர்வு காலம் 14 ஆண்டு முதல் 25 ஆண்டுகள் வரை இருக்கும் இந்த பாலிசியில் குறைந்தபட்ச முதிர்வு தொகை 2 லட்சம் வரை கிடைக்கும்.