Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பங்குகள் விற்பனை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பங்குகளை விற்று அதன் மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டப்படும் என தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் போன்றவை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருந்தபோதிலும் எல்ஐசி பங்குகளை விற்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தமது நாடாளுமன்ற பட்ஜெட் உரையின் போது, எல்ஐசி பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் எனவும் கூறியிருந்தார். மேலும் எல்ஐசி பங்குகளை சந்தையில் விற்பனை செய்வதற்கான அனுமதியை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் மத்திய அரசு கோரி விண்ணப் பத்தை வழங்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக எல்ஐசியின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும், அதன் மூலம் 63 ஆயிரம் கோடி வரை நிதி திரட்டவும் மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Categories

Tech |