இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். எனினும் உரிய தேதியில் பிரீமியம் செலுத்தாவிட்டால் பாலிசிகள் காலாவதி ஆகிவிடும். அந்தவகையில் காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு முகாமை பிப்ரவரி 7ஆம் தேதி முதல் எல்ஐசி நிறுவனம் தொடங்கியது.இந்த சிறப்பு முகாம் இன்றுடன் (மார்ச் 25) முடிவுக்கு வருகிறது.
இந்த சிறப்பு முகாமில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரீமியம் செலுத்தாமல் விட்ட பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம். கொரோனா நெருக்கடி காலகட்டம் என்பதை கருத்தில் கொண்டு பாலிசிகளை புதுப்பிக்க தற்கான தாமத கட்டணம் போன்றவற்றில் சலுகைகள் வழங்கப்படுகிறது.
மேலும் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம்களின் அடிப்படையில் சலுகை வழங்கப்படும்.பாலிசியை புதுப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்துக்கு செல்லலாம். அல்லது ஆன்லைனிலும்https;//licindia.in/ இணையதளத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம்.