Categories
அரசியல்

எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு இப்படி ஒரு வசதியா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கொரோனா பிரச்சனை வந்த பிறகு பெரும்பாலானோர் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். அதனால் எல்ஐசி நிறுவனத்தின் பாலிசி விற்பனை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இந்த எல்ஐசி பாலிசி எடுப்பவர்கள் அதற்கான பிரீமியம் தொகையை ஆன்லைன் மூலமாக மிக எளிதில் செலுத்த முடியும். பேடிஎம், கூகுள் பே போன்ற மொபைல் ஆப் மூலமாக பாலிசிக்கான பிரீமியம் செலுத்தலாம். அது எப்படி என்று இங்கு விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

>> கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதற்கு முதலில் ஸ்மார்ட்போனில் கூகுள் பே ஆப் ஒப்பன் செய்யவும்.

>> Bill Payment ஆப்சனில் சென்று Finance & Taxes பிரிவில் இன்சூரன்ஸ் வசதியை தேர்ந்தெடுக்கவும்.

>> LIC என்பதை கிளிக் செய்து உங்களுடைய பாலிசி நம்பரை அதில் இணைக்க வேண்டும்.

>> பாலிசி நம்பர், இ-மெயில் ஐடி கொடுத்து இணைக்க வேண்டியிருக்கும்.

>> உங்களுடைய பாலிசி இணைக்கப்பட்ட பிறகு நீங்கள் பிரீமியம் செலுத்தலாம். கூகுள் பே மூலமாக வழக்கமாக பணம் அனுப்புவது போல, PIN நம்பர் கொடுத்து பாலிசி தொகையை நீங்கள் செலுத்தலாம்.

Categories

Tech |