Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பாலிசிதாரர்களே…! பெறப்படாத தொகையை அறிய…. இதோ ஈஸியான வழி…!!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று  எல்ஐசி.இந்த நிறுவனம் தற்போது ஐபிஓ விற்காக செபியிடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களின்படி எல்ஐசி நிறுவனத்திடம் இன்னும் பாலிசிதாரர்கள் பெற்றுக்கொள்ளாத தொகையாக ரூபாய்21,539 கோடி உள்ளது.

மேலும் இந்த தொகை கடந்த செப்டம்பர் மாத நிலவரம் ஆகும். பாலிசிதாரர்கள் பெற்றுக்கொள்ளாத தொகை எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. ஐபிஓ வாயிலாக எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய இந்திய அரசு முடிவு செய்து வருகிறது. இதில் ஒரு பாலிசிதாரருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறப்படாத தொகை இருந்தால் அது குறித்த செய்திகளை  சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.

மேலும் நீங்கள் எல்ஐசி பாலிசிதாரர் என்றால் அதில் பெறப்படாத தொகையை எப்படி தெரிந்து கொள்வது என்பதை காண்போம்.  பாலிசிதாரர்கள்ரர்கள் https://licindia.in/Bottom-Links/unclaimed-policy-dues என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதில் எல்.ஐ.சி பாலிசி பாலிசிதாரர் பெயர், பிறந்த தேதி, பான் கார்டு உள்ளிட்ட விவரங்களை நிரப்பவும். இப்போது சப்மிட் பட்டனை கிளிக் செய்யவும். இப்போது பெறப்படாத தொகை பற்றிய தகவல்கள் அதில் வந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |