காலாவதியான எல்ஐசி பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் வாய்பளித்துள்ளது.
கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிப்பதற்கு எல்ஐசி நிறுவனம் அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் கடந்த 7.1.2021 அன்று தொடங்கியது. இந்த முகாம் வரும் 6.3.2021 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிக்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் காலாவதியான பாலிசியை மீண்டும் தொடங்க எல்ஐசி வாய்ப்பளித்து உள்ளது.
அதன்படி காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறிது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் பாலிசிதாரர்களுக்கு பாலிசியை தாமதமாக கட்டுவதற்கான விதிக்கப்படும் தாமதக் கட்டணத்தில் 20 சதவீதம் அல்லது ரூபாய் 2000 தள்ளுபடி கிடைக்கும் திட்டத்தை எல்ஐஐ கொண்டு வந்துள்ளது. இந்த வாய்ப்பை மார்ச் 6ஆம் தேதி வரை தொடர முடிவு செய்துள்ளது.