எல்ஐசி (LIC) பென்சன் வாங்கும் நபர்கள் ஆன்லைனிலேயே வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? என்று இப்போது பார்க்கலாம். எல்ஐசி பென்சன் வாங்கும் நபர்கள் எளிதாக செல்போன் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்தே டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே தாக்கல் செய்துவிடலாம்
இதற்காக எல்ஐசி நிறுவனம் LIC Jeevan Saakshya என்ற செல்போன் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் இந்த ஆப்பை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின் அதில் உங்களது பாலிசி விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். இதனையடுத்து செல்ஃபி படத்தை எடுக்க வேண்டும். இது உங்கள் டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழில் பயன்படுத்தப்படும்.
இதன்பின் உங்கள் ஆதார் வெரிஃபிகேஷன் நடந்து உங்கள் செல்போனுக்கு வரும் OTP passwordஐ பதிவிட வேண்டும். இதன்பின் உங்களது டிஜிட்டல் வாழ்வுச் சான்றிதழ் வரும். அதை நீங்கள் பதிவிறக்கம் செய்து சமர்ப்பித்துவிடலாம். LIC Jeevan Saakshya ஆப் ஆண்ட்ராய்ட் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். iPhone பயனர்களால் இந்த ஆப்பை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.