இனி சிலிண்டர் மானியம் இவர்களுக்குக் கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமையல் சிலிண்டருக்கான மானியம் இவர்களுக்கு இனி கிடைக்காது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்தியாவில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தும் மக்களை ஊக்குவிப்பதற்காக அவர்களின் சுமையை குறைப்பதற்காக அரசுத் தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மானிய தொகை வெவ்வேறு அளவில் இருக்கும். கொரோனா தொற்று பிரச்சினைக்கு முன்பு வரை நூறு ரூபாய்க்கு மேல் மானியம் வழங்கப்பட்ட நிலையில், அதன் பிறகு 20 முதல் 30 ரூபாய் மட்டுமே மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.
கொரோனா பிரச்சனை வந்த பிறகு இந்திய அரசுக்கு வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்ததால் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. சொல்லப்போனால் பலருக்கு மானிய தொகை கிடைக்கவில்லை. சிலிண்டருக்கான மானிய திட்டத்தை மத்திய அரசு நிறுத்தப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிடவில்லை. தற்போது தொற்று பிரச்சினை குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் சென்ற ஆண்டிலிருந்து சிலிண்டர் மானியம் நிறைய பேருக்கு வர தொடங்கியுள்ளது. ஆனால் 27 ரூபாய், 38 ரூபாய் என்ற அளவிலேயே மானியம் வருகின்றது.
சிலிண்டர் விலை 1000 ரூபாய்க்கு சென்று நிலையில் மிகச்சிறிய அளவிலான மானியம் பயனாளிகளுக்கு போதுமானதாக இல்லை. மத்திய அரசு தரப்பில் இருந்து உஜ்வாலா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே இனி சிலிண்டர் மானியம் கிடைக்கும் என்ற செய்தி அரசு தரப்பிலிருந்து வெளியானது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன் பெற்று வரும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு ஆண்டில் 12 சிலிண்டருக்கு தலா ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஏழை எளிய மக்களில் எல்பிஜி சிலிண்டர் ரூபாய் 200 மானியம் பெறுவதால் மத்திய அரசுக்கு 6500 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.