இந்தியாவில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையலுக்கு எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையில் மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர் விலையை அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு விலையை உயர்த்தினாலும் மத்திய அரசானது சிலிண்டர் விலையில் ஒருகுறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கி வருகிறது. இந்த தொகையானது சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வேவரவு வைக்கப்படும். ஆனால் இத்தொகையானது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மானியத்தொகை கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் கூறி வருகின்றனர். அத்துடன் பலரும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தொகையை விரைவில் வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தது. இது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது சிலிண்டர் மானியத் தொகை மீண்டும் வரவு வைக்கப்படுகிறது. LPG எரிவாயுசிலிண்டருக்கு ரூபாய் 79.26 மானியமாக வழங்கப்படுகிறது. எனினும் வாடிக்கையாளர்களுக்கு பல மானியங்கள் கிடைத்து வருகிறது. இதனிடையில் வீட்டில் இருந்தபடியே மானியத்தை புதுப்பித்து கொள்ளலாம்.
இந்த மானியம் சரியாக வருகிறதா என்பதனை வீட்டில் இருந்து சரிபார்க்க www.mylpg.in எனும் இணையதளத்தில் முதலில் ஓபன் செய்ய வேண்டும். அதன்பின் வலது பக்கத்தில் உள்ள ஐகான் வாயிலாக நீங்கள் பயன்படுத்தி வருகிற சிலிண்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து sign in அல்லது sign up கேட்கும். அப்போது ஐடி முன்பே உருவாக்கப்பட்டு இருந்தாலும் அப்படியே login செய்யலாம்.
இல்லையெனில் new user என்ற ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும். பின் இப்போது புதிய விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள View Cylinder Booking History என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தங்களுடைய சிலிண்டர் மானியம் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். அதிலும் குறிப்பாக மானியத்தொகை வந்த கடைசி தேதி, மற்றும் தேவையான அனைத்து தகவலும் இருக்கும். இம்மாதம் தங்களுக்கு மானியத்தொகை வரவில்லை என்றால் feedback என்ற பட்டனை கிளிக்செய்து தங்களின் புகாரை தெரிவிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.