தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவிக்கு நீதி வேண்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து இதுவரை முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று கூறினார்.
மேலும் கட்டாய மதமாற்றம் தமிழகத்தில் நடைபெறவே இல்லை என்று முதல்வரால் அறிக்கை வெளியிட முடியுமா ? என்று கேட்டார். அதேபோல் எல்லாவற்றிற்கும் குரல் கொடுக்கும் திருமாவளவன் இப்போது எங்கே போனார் ? என்றும் கேள்வி எழுப்பினார்.