கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட முதல்வர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேசிய கல்வி கொள்கை சம்பந்தமாக தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கனவே விளக்கமாக சொல்லி விட்டோம். எல்லா ஊடகத்திலும் பத்திரிக்கையின் போட்டு விட்டீர்கள். பேரறிஞர் அண்ணா கண்ட கனவு. புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவு இருமொழிக் கொள்கை தான் தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும். அதற்கான அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.
சுற்றுலாத்தலங்கள் மட்டுமல்ல பல்வேறு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதை எல்லாம் இன்றைக்கு இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறது.பருவ மழையை சந்திக்க அரசு தயாராக இருக்கிறது. இப்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அங்கே கூட நம்முடைய உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரடியாகச் சென்று அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளேன், அவர்கள் அங்கே செல்ல இருக்கிறார்கள்.
மக்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு அனைத்து நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று முதல்வர் தெரிவித்தார்.